தொகுதி நலனுக்காக தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளேன் என்று பாரிவேந்தர் தெரிவித்தார். இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனரும், எம்.பியுமான பாரிவேந்தர் சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு 100 கணினிகள் வழங்கும் விழா திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களிடம் பாரிவேந்தர் கணினிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரிவேந்தர், “கடந்த ஆறு மாதங்களில் மத்திய அமைச்சர்களை சந்தித்து தொகுதிக்கு வேண்டிய பல்வேறு திட்டங்களை […]
