ஐஐடி_யில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை இன்று தமிழக முதல்வரை சந்திக்க இருக்கின்றார். சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை மத்திய குற்றவியல் பிரிவு போலீசார் கையில் எடுத்துள்ளனர்.இதற்கிடையே மாணவியின் பெற்றோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இருக்கிறார். இன்று மதியம் விமானம் மூலமாக அவருடைய பெற்றோர் சென்னை வருகிறார்கள்.அதன் பிறகு நேரடியாக தலைமைச் செயலகம் சென்று முதல்வரை சந்திக்க அனுமதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
