தமிழ்நாட்டில் இருந்து 6 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்துக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் 2010-ம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலைக் கொண்டு சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த ஐசிடி விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் என்சிஇஆர்டி சார்பில் இந்த விருது விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் கல்வித்துறை சார்ந்து சிறந்த முறையில் தகவல் மற்றும் தொழில்நுட்பக் கலை மூலம் கற்பிப்பவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. […]
