மோடிக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லையென்றும் அவர் மக்களுக்காக செயல்படுவதை விடுத்து பெரு முதலாளிகளுக்காக செயல்படுகிறார் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஹரியானாவில் மகேந்திர கர் பகுதியில் சோனியாகாந்தி பங்கேற்கவிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக ராகுல் காந்தி கலந்துகொண்டு பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ஜிஎஸ்டி வரிவிதிப்பாலும், பணமதிப்பு இழப்பாலும் சிறு தொழில் நிறுவனங்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு இந்த இரண்டும் இந்திய […]
