இந்தாண்டு ஆஸ்திரேலியாவிலும், அடுத்தாண்டு இந்தியாவிலும் நடைபெறும் அடுத்தடுத்த இரண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் தான் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருப்பேன் என இயான் மோர்கன் தெரிவித்துள்ளார். இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஐசிசியின் விதிமுறைப்படி கடந்த ஆண்டு தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது. கிரிக்கெட்டை கண்டுப்பிடித்த நாடு இதுவரை உலகக் கோப்பை வெல்லவில்லையே என்ற பேச்சுக்கும் மோர்கன் அண்ட் கோ முற்றுப்புள்ளி வைத்தது. இதைத்தொடர்ந்து, வரும் […]
