கணவனுக்காக மனைவிமார்கள் மது வாங்க வரிசையில் நின்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மூன்றாம் தேதிக்கு பின் தளர்வுகளுடன் தனிகடைகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. மதுபானக் கடைகளிலும், அரசு விதிமுறைகளின்படி கொரோனாவை தடுக்கும் விதமாக சமூக விதிகளை கடைபிடித்து பொதுமக்கள் மதுபானங்களை வாங்கி செல்ல வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது. […]
