இடைத்தேர்தல் பயத்தால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது . அதன்படி செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு பரிசீலனை அக்டோபர் ஒன்றாம் தேதியும், வேட்பு மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 3 ஆம் தேதியும், கடைசியாக அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் […]
