பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ராஜ் என்பவரின் மனைவி காஞ்சனா, பிரசவத்திற்காக விஜயமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்தவர் இல்லாததால் காஞ்சனாவிற்கு செவிலியர் சுகன்யா என்பவரே பிரசவம் பார்த்துள்ளார். அப்போது, குழந்தையின் தலை பாதி வெளியே வந்த நிலையில், அசைவின்றி நின்றுவிட்டது. இதனால், அருகில் உள்ள […]
