ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழர்கள் அதிகம் வாழும் வெளி மாநிலங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் தருமென சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்ததன் அடிப்படையில், […]
