வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடுக்கூடலூர் பகுதியில் இருக்கும் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இதேபோல் சில வீடுகள் மண்ணுக்குள் புதையும் அபாயத்தில் இருக்கிறது. இதனால் வீடுகளில் தங்க முடியாமல் […]
