தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீயை அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ். புரத்தில் ராஜேஷ்குமார் அகர்வால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்காநல்லூர் பகுதியில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் பழைய பஞ்சு குடோன் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த குடோனில் சூப்பர்வைசராக பணியாற்றிய உமா மகேஸ்வரி என்பவர் இரவில் பணி முடித்துவிட்டு குடோனை மூடி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்த […]
