பெற்றோரை இழந்து விட்டோம்.. அதனால் எங்களை விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்ககோரி 2 மாணவிகள், பண்ருட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து, கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளனர்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மாளிகைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் பாபு – லதா தம்பதியர்.. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக பாம்பு கடித்து பாபு இறந்தார். அதன்பின் லதா தன்னுடைய மகள்களுடன் தனியாக வசித்து வந்த நிலையில், பாபு இறந்ததால் மனவேதனையில் இருந்து […]
