பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் ராபர்ட் எடிசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை ராபர்ட் எடிசன் ஸ்டிரெச்சரில் வைத்து தள்ளி சென்றுள்ளார். அப்போது பாதி மயக்கத்தில் இருந்த பெண்ணிற்கு ராபர்ட் பாலியல் தொந்தரவு அளித்ததால் அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். […]
