காட்டெருமைகள் முட்டியதால் குதிரை பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னப்பள்ளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 3 குதிரைகள் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தோட்டத்திற்குள் புகுந்த காட்டெருமைகள் 2 குதிரைகளை பலமாக முட்டியது. இதனால் படுகாயமடைந்த ஒரு குதிரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த குதிரையின் உடலை பரிசோதனை செய்து […]
