உத்தரபிரதேசத்தில் கொரோனா எதிர்ப்பு பணியில் இருக்கும்போது பிறந்த தனது மகனுக்கு ஊர்காவல் படை வீரர் ஒருவர் கொரோனா என்று பெயரிட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் பில்தாரா காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார் ரியாசுதீன். கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இவர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் பிரசவ வலியால் துடித்த ரியாசுதீனின் மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. […]
