ஓய்வு பெற்ற ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பால்வாய் கிராமத்தில் ஆனந்தகிருபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். இவருக்கு திருமணமாகி ரேணுகா என்ற மனைவி உள்ளார். இவர் அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். இந்நிலையில் ஆனந்தகிருபாகரன் தனது மனைவியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது நாயின் சத்தம் அதிக அளவில் […]
