பத்து மாதங்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் கோவிலில் உள்ள தீர்த்தக்கிணறு திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அதோடு கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த கோவிலில் […]
