கோவை பண்ணியமடை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தயார் மனுதாக்கல் செய்துள்ளார். கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவமானது மாநில அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அதே பகுதியில் வசித்துவந்த சந்தோஷ் குமர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாளை இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. […]
