போதைப் பொருள் வைத்திருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கு ஜப்பானில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முகமது அலி ஜின்னாவின் கொள்ளுப் பேரனும், தொழிலதிபர் நுஸ்லி வாடியாவின் மகனுமான நெஸ் வாடியா கடந்த மாதம் ஜப்பானில் உள்ள ஹொக்காய்டோ (Hokkaido) தீவுக்குச் சென்றிருந்தார்.அப்போது அங்கு அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அவரது ஆடையில் இருந்து 25 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பற்றி விசாரணை நடத்தியதில் அதனை தனது சொந்தப் […]
