உடுமலையில் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் அட்டகாசம் செய்து வருவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நூற்றுக்கணக்கான வனத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு த்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. அங்கு காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி உடுமலை வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். […]
