இன்றைய தினம் : 2019 மே 17 கிரிகோரியன் ஆண்டு : 137_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 138_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 228 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் : 1498 – வாஸ்கோ ட காமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார். 1521 – பக்கிங்காமின் மூன்றாவது நிலை சீமானான எட்வர்ட் ஸ்டாஃபோர்ட் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். 1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர், ஆன் பொலின் ஆகியோரின் திருமணம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது. 1590 – டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினார். 1792 – நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது. 1805 – முகமது அலி எகிப்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1809 – பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டார். 1814 – நோர்வேயின் அரசியலமைப்பு சட்டம் […]
வரலாற்றில் இன்று மே 17..!!
