கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மசோதாவில் வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இருப்பினும் மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக அவர் அறிவித்தார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று […]
