வெளிநாடு சென்றுவிட்டதாகக் கூறப்படும் நித்தியானந்தாவை குஜராத் மாநில காவல்துறையினர் தேடிவரும் நிலையில், தான் இமயமலையில் தான் இருக்கிறேன் என சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை நித்தியானந்தா வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள யோகினி சவாஜ்னா பீடம் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சோதனை நடத்திய அகமதாபாத் போலீசார், குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவர், சிறுமியரை கடத்தி […]
