பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில், நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தி மொழியால் மட்டுமே நாட்டையும் , நாட்டு மக்களையும் ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. […]
