வேலூரில் இனி நாள்தோறும் வாகன சோதனை நடைபெறும் எனவும் விதிகளை பின்பற்றவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மண்டல அளவிலான சாலை பாதுகாப்பிற்கான கூட்டம் கடந்த நான்காம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் போக்குவரத்து தலைமை அதிகாரி உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சாலை போக்குவரத்தை மீறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் அதற்கு நாள்தோறும் வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு […]
