Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று கன மழைக்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம்!!! 

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது . தமிழகத்தில்  சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விழுப்புரம், தருமபுரி, சேலம், மதுரை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று  மழைக்கு வாய்ப்புள்ளதாக   வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக  கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது .

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா..!! ”ரூ 50,000,00,00,000 கேட்டு” பிரதமரை பார்க்க போகும் எடியூரப்பா ..!!

கர்நாடகாவுக்கு மழை வெள்ள சேதாரத்தை சரி செய்ய 50,000 கோடி கேட்டு பிரதமரை சந்திக்க இருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை  தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றி விட்டது. உத்தர கர்நாடகா,  சிவமோகா ,  மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் விடியவில்லை.  சிவமோகா-வில் உள்ள துங்கா நதியில் இருந்து பெருக்கெடுத்த வெள்ளத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

40 பேர் பலி ”கனமழை ஓய்ந்தது” முழு வீச்சில் நிவாரணப் பணி….!!

கர்நாடகாவில் கனமழை ஓய்ந்து உள்ளதை அடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை  தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றிவிட்டது. உத்தர கர்நாடகா,  சிவமோகா ,  மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் விடியவில்லை. இதனிடையே கர்நாடக மாநிலம் கொப்பல் நகரத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்த 5 […]

Categories
தேசிய செய்திகள்

”கர்நாடகாவில் கூரை மேல் முதலை” வைரலாகும் வீடியோ …!!

கர்நாடகாவில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை வீட்டில் மேற்கூரை இருப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டி தீர்த்த மழையால் கர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறி நூற்றுக்கணக்கான கிராமங்களை  தண்ணீர் தனித் தீவுகளாக மாற்றிவிட்டது. உத்தர கர்நாடகா, சிவமோகா ,  மிளகாவி , மைசூர் , மங்களூர் மற்றும் குடகு உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. இதனிடையே வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட  விலங்குகள் மூட்டுகள் வீடுகளுக்குள் புகுந்து […]

Categories
தேசிய செய்திகள்

”2,00,000 பேர் காலி” மராட்டியத்தை தீர்த்து கட்டிய மழை….!!

மராட்டியம் , குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மராட்டியத்தில் கோலாப்பூர் , சார்தரா , சங்கிரி உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த மாநிலத்தில் மழை வெள்ளத்திற்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர்.2 லட்சம் பேர் காலி செய்து வெளியேற்றப் பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையில் ராணுவம் மற்றும் கப்பல் படை , தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். படகுகள் மூலம் பொது மக்கள் மீட்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

”மும்பையை மீண்டும் மிரட்டும் மழை” மிக கனமழை வாய்ப்பு …..!!

மும்பைக்கு இன்றும் நாளையும் மிக கனமழை வாய்ப்புள்ளது என்று மும்பை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கனமழை கொட்டித் தீர்த்தது. மும்பைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு பெய்த  இந்த மழையால் அங்குள்ள தாழ்வான பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.இதனால் மும்பைக்கு பொது விடுமுறை அறிவித்து மாநில அரசு மீட்பு பணியை தூரிதப்படுத்தியது. மழையின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மக்களின் இயல்பு […]

Categories
தேசிய செய்திகள்

“ஒன்றரை வயது குழந்தையை” வாசுதேவராக தலையில்  சுமந்து  காப்பாற்றிய காவலர் !!..

குஜராத்தில்  உதவி ஆய்வாளர் ஒருவர்  கழுத்தளவு  வெள்ளத்தில்  பச்சிளங்குழந்தையை  தலையில்  சுமந்து  சென்று  காப்பாற்றியது   பலரது  பாராட்டுகளையும்  பெற்றுள்ளது . கடந்த  சில  நாட்களாக குஜராத்  மாநிலம்  வதோதராவில்  பெய்துவரும்  கனமழை காரணமாக  அப்பகுதியில்  வெள்ளம்  சூழ்ந்துள்ளது . வெள்ளத்தில்  சிக்கியிருந்த  மக்களை   மீட்கும் பணியில்  மீட்புபடையினர்  ஈடுபட்டு  வருகின்றனர் .  இந்நிலையில்  விஸ்வாமித்திரி ரயில் நிலையம் அருகில்    உள்ள  தேவி புரா  பகுதியில்  காவல்துறை  உதவி  ஆய்வாளர்   கோவிந்த்  சாவ்தா   கழுத்தளவு  தண்ணீரில்  இறங்கி பச்சிளங்குழந்தையை தலையில்  சுமந்து  சென்று […]

Categories
தேசிய செய்திகள்

“43,00,000 மக்கள் பாதிப்பு”அசாமை புரட்டி போட்ட கனமழை…..!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அசாம் மாநிலத்தில் சுமார்  43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை விட இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கி , வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தீவிரம் அடைந்து  வெளுத்து வாங்கி வருகின்றது. குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் , அசாம், நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் . மக்களின் இயல்பு […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் கனமழை ….வெள்ளம் , நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் பலி…!!

நேபாளத்தில் தொடர்ந்து பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் கடந்த சில  தினங்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது.  தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பல நகரங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு முற்றிலும் முடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் தண்ணீரில் மிதக்கின்றது. இதனால்  ஆங்காங்கே […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மும்பைக்கு மீண்டும் கனமழை…வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை……!!!

மும்பையில்  மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரித்துள்ளது   மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 10 நாட்களாக கொட்டும் கனமழையால்  தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளித்தது .நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் முழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைத நிலையில் அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு  மீட்புப்பணி நடைபெற்று வந்தது   கடந்த 10 நாட்களாக பெய்து வந்த மழை  இதுவரை இல்லாத அளவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை அணை உடைப்பால் பலி எண்ணிக்கை 18_ஆக அதிகரிப்பு …!!

மஹாராஷ்டிரா_வில் பெய்த கன மழையில் அணை  உடைந்து வெள்ளநீர் புகுந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 18_ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த சில நாட்களாக கொட்டும் கன மழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையின் அளவு பதிவாகியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தின் திவாரே அணை அதிக நீர் வரத்தால் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையை மிரட்டிய மழை “அணை உடைந்ததில் 6 பேர் பலி” 18 பேர் காணவில்லை…!!

மஹாராஷ்டிரா_வில் பெய்த கன மழையில் அணை உடைந்து 6 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டும் கன மழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையின் அளவு பதிவாகியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தின் திவாரே அணை அதிக நீர் வரத்தால் உடைந்தது. இதிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

45 ஆண்டுகளாக இல்லாத வரலாறு காணாத மழையால் மூழ்கியது மும்பை…!!

மும்பையில் 45 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத அளவு மழை பதிவாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 5 நாட்களாக கொட்டும் கனமழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது.நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் முழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இதனால் நேற்று அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழையால் இரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவை […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தால் தத்தளிக்கும் மும்பை “பலி எண்ணிக்கை அதிகரிப்பு” தயார் நிலையில் மீட்புக் குழுவினர்..!!

மும்பையில் தொடரும் கனமழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் அங்குள்ள  தெருக்களிலும் , சாலைகளிலும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றது.பல்வேறு பகுதிகளில் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மும்பை மாநகரமே தண்ணீரில் மிதக்கிறது. தொடர் மழையால் மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. போக்குவரத்து சேவை முடக்கம் : மும்பையில் தொடர் மழை வெள்ளம் காரணமாக சாலை போக்குவரத்து ,  விமான போக்குவரத்து மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கனமழை எதிரொலி “10 விமானம் இரத்து” 54 விமானம் திருப்பிவிடப்பட்டது..!!

மும்பையில்  தொடரும் கனமழை காரணமாக 54 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகின்றது. தெருக்களிலும் , சாலைகளிலும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மும்பை மாநகரமே தண்ணீரில் மிதக்கிறது. மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மும்பை கனமழை குறித்து வானிலை ஆய்வு மையமும் இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்கை முடங்கும் அளவிற்கான தொடர்மழை காரணமாக அம்மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]

Categories

Tech |