கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுக்க இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் லங்கா கார்னர் ரயில்வே பாலம், அவிநாசி ரோடு மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக ஸ்ரீபதி நகர், குனியமுத்தூர் அம்மன் கோவில் வீதி, தடாகம் ரோடு, போத்தனூர் ரோடு உள்ளிட்ட மாநகராட்சி சாலைகள் சேரும், சகதியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பொம்மன்பாளையம் மதுரை வீரன் கோவில் […]
