பேருந்தை இயக்க முயற்சி செய்யும் போது டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் வசிக்கும் அசோக் குமார் என்ற டிரைவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சாப்பிடுவதற்காக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கொள்ளார் கிராமத்தின் சாலையோரம் இருக்கும் ஹோட்டல் அருகில் அசோக்குமார் பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனை அடுத்து சாப்பிட்டு முடித்தவுடன் திருவண்ணாமலை நோக்கி பேருந்தை […]
