தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அதிகாலையில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் சேலத்தில் அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையம் […]
