தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோவிலில் வருகின்ற 5ஆம் தேதி குடமுழுக்கு விழா ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. இதனை சமஸ்கிருதத்தில் நடத்தாமல் தமிழில் நடத்த வேண்டுமென்று ஏராளமானோர் கோரிக்கை முன்வைத்து வந்த நிலையில் குடமுழுக்கை சமஸ்கிருதத்தில் நடத்தக்கோரி சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற பொது தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு நடந்ததாக புகார் சொல்லப்பட்டது.
