மரணத்தை உணர்வு நிலையில் அணுகுவதை விடவும், தத்துவார்த்த நிலையில் நின்று அணுகும் போது கிடைக்கும் ஆறுதல் இதம். ஆனால் மரணத்தை எளிய மனிதர்கள் அனைவராலும், தத்துவார்தமாக பார்க்க முடியாது. வாழ்வு குறித்து அனுபவத்தில் தீண்டிடாததொரு மனதிற்கு மரணம் என்பது துன்பமே அன்றி, வேறு இல்லை. கொரோனா யுத்தத்தில் கொத்து கொத்தாக மனிதர்கள் செத்து விழும் துயர காலத்தை நாம் கடந்தோம். காலமானது கேலரி ரசிகனாக அமர்ந்து இந்த காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது. கொரோனா எனும் வைரஸால் உலகமே […]
