கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் தேவைப்படுவதாக மாநிலங்களிலிருந்து தகவல் வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கப்பட பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை […]
