அமெரிக்காவில் காதல் திருமணம் செய்து கொண்ட சில நிமிடத்தில் தம்பதிகள் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடிகள் ஹார்லி மோர்கன் , பவுட்ரியாக்ஸ். இவர்கள் தங்களின் காதலை பெற்றோர்களிடம் தெரிவித்து இரு வீட்டார்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்தனர்.பின்னர் புதிய வாழ்க்கை தொடங்க சென்ற அந்த தம்பதிகள் குடும்பத்தினர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
