Categories
சினிமா தமிழ் சினிமா

துப்புரவுத் தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கௌதமி.!!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகை கௌதமி துப்புரவுத் தொழிலாளர்களைச் சந்தித்து பரிசுப்பொருள்களை வழங்கி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார். தமிழ் திரையுலகில் 1980களின் இறுதியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. ரஜினி, கமல், சத்யராஜ், ராமராஜன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்துள்ளார். திரைப்பயணம் தவிர்த்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மையமான ‘லைஃப் அகைன்’ என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்திவருகிறார். படத்தின் மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை, வாழ்க்கையின் முக்கியத்துவம், தன்னம்பிக்கை, […]

Categories
மாநில செய்திகள்

காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கேக் வெட்டி விழிப்புணர்வு.!!

காவல் செயலி தொடர்பாக மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பொதுமக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு 2020ஐ பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். கோயில், பூங்கா, சுற்றுலாத்தலம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தங்களது வாழ்த்துகளைப் பறிமாறிக்கொண்டனர். அதன் ஒருபகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் திரளான இளைஞர்கள், குத்தாட்டம் ஆடியும் கேக் வெட்டியும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்றனர். இதனிடையே, மெரினா கடற்கரைக்குச் சென்ற சென்னை காவல் ஆணையர் […]

Categories
பல்சுவை வானிலை

கடலோர மாவட்டங்களில் 4 நாள்கள் மழைக்கு வாய்ப்பு.!

கடலோர மாவட்டங்களில் மேலும் 4 நாள்களுக்கு மழைப்பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபர் முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான நாள்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பைவிட அதிகமாக 2 விழுக்காடு மழை பெய்துள்ளது.சென்னையை பொறுத்தவரை 761 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 637 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. இது 16 விழுக்காடு குறைவாகும். 2020 புத்தாண்டு தினத்தில் அதிகாலை முதலே வளிமண்டல […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம் அல்ல; குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் புத்தாண்டின்போது மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் நள்ளிரவில் சென்னை சைதாப்பேட்டையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் நடைபெற்றது. இதில், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள், மனிதநேய ஜனநாயக கட்சியினர், இஸ்லாமிய அமைப்புகள், பொதுமக்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: சீறிப் பாய்ந்த வாகனங்களை விரட்டிப் பிடித்த காவல் துறை.!!

புத்தாண்டை முன்னிட்டு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், விபத்து ஏற்படுத்தும் வகையில் சீறிப் பாய்ந்த வாகனங்களை விரட்டிப் பிடித்தனர். சென்னையில் இன்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விபத்துகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் சட்டவிரோதமாக இருசக்கர வாகன பந்தயங்களைத் தடுக்கும்விதமாகவும் நகரெங்கும் 15 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை நகரில் மிக முக்கியமான 300-க்கும் மேற்பட்ட இடங்களில், வாகன சோதனை நடத்தப்படும் எனக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்டார் நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சுசீந்திரன்.!!

ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் தங்களது ரசிகர்களுக்குப் புத்தாண்டு ஏற்படும் விபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என இயக்குநர் சுசீந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் சினிமா துறை சார்ந்த பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை மக்களுக்குத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சுசீந்திரன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் இதுவரை நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். 2020ஆம் புத்தாண்டிலாவது யாரும் விபத்தினால் மரணம் அடையக்கூடாது என்று […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

2020 புத்தாண்டே வருக… வருக…! – வானை வண்ணமயமாக்கிய வாணவேடிக்கைகள்..!!

2020 புத்தாண்டை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வாணவேடிக்கைகள், கொண்டாட்டங்களுடன் வரவேற்றன. பசிபிக் நாடுகள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள பெருநகரங்கள் வழக்கம்போல வாணவேடிக்கைகளால் வளிமண்டலத்தை அலங்கரித்தனர். இதனைக்காண குடும்பத்துடன் திரளாக வந்த மக்கள் அன்னாந்து பார்த்து புத்தாண்டை வருக வருக என வரவேற்றனர். கொரியாக்கள் வடகொரியர்கள் தங்களுக்கே உரிய பாணியில் பாரம்பரிய கொரிய பாடலைப் பாடியும், வாணவேடிக்கைகள் நடத்தியும் புத்தாண்டை வரவேற்றனர். தலைநகர் பியாங்யாங்கில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

2019ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்.!!

2019ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.   1. முற்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு: (ஜனவரி 9) அரசியல் சாசனப்பிரிவு 124இன்படி சமூக, கல்விரீதியில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டை பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2. புல்வாமா தாக்குதல்: (14 பிப்ரவரி) ஸ்ரீநகரிலிருந்து காஷ்மீருக்கு மத்திய ஆயுத காவல்படை (சி.ஆர்.பி.எஃப்.) வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டம்… பாதுகாப்புப் பணியில் 15,000 காவல்துறையினர்!

ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக மாநகர் முழுவதும் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாளை நள்ளிரவு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி மெரினா கடற்கரை, கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவர். எனவே, பாதுகாப்புப் பணியில் சுமார் 15 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பல்வேறு பாதுகாப்புப் பணிகளிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது.குறிப்பாக, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, கீழ்ப்பாக்கம், புளியந்தோப்பு, அயனாவரம் உள்ளிட்ட 368 இடங்களில், காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளனர். வழிபாட்டு […]

Categories
மாநில செய்திகள்

ரூ 10 இருந்தால் போதும்… சென்னையை சுற்றி பார்க்கலாம்… புத்தாண்டு ஸ்பெஷல்..!!

ஜனவரி 1ஆம் தேதி அன்று ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மக்களிடையே சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நோக்கத்துடனும் 10 ரூபாய் கட்டணத்தில் சென்னை நகர சுற்றுலா (எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்) புத்தாண்டு அன்று ஒரு நாள் மட்டும் (01.01.2020) அன்று சிறப்பு சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுலா வளாகத்தில் […]

Categories

Tech |