தூத்துக்குடி அருகே மூன்று சக்கர ஸ்கூட்டர் கேட்டு தீக்குளிக்க முயன்ற மாற்றுத் திறனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டா பசுமை வீடு உள்ளிட்டவற்றையும் சேர்த்து கோவில்பட்டி தாசில்தார் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வ உ சி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பத்மநாதன். இவர் நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் தனக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்க வேண்டி கடந்த 2018 ஆம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை இவருக்கு ஸ்கூட்டர் […]
