பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி புதுத்தெருவில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அறைக்குள் தூங்கச் சென்ற பிரசாந்த் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பிரசாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். […]
