அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் குறித்து இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கொரோனோ வைரசுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் லட்சக்கணக்கான மக்கள் அதை வென்று மீண்டும் வந்துள்ளனர். இதனை மனித குலத்திற்கான தன்னம்பிக்கையாக கருதுவோம். எப்போவும் […]
