சிறுவன் தலையில் இருந்து அகற்றப்பட்ட குண்டானது ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பசுமலைப்பட்டி கிராமத்தில் போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பயிற்சி மேற்கொள்வர். இந்நிலையில் பசுமலைப்பட்டி பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஒரு குண்டு 2 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்றுள்ளது. அந்த குண்டு நார்த்தாமலையில் இருக்கும் ஒரு குடிசை வீட்டின் வாசலில் […]
