ராமேஸ்வரத்திலிருந்து படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலைகளை வெட்டி விட்டு இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 570 படகுகளில் 1500 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 6 விரைவு படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை வெட்டிவிட்டு துப்பாக்கி முனையில் அவர்களை விரட்டி உள்ளனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் மீது தொடர் தாக்குதலில் ஈடுபடுவதால் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதாக மீனவர்கள் […]
