நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்பல் வாலிபரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லூர் கிராமத்தில் லோகேஷ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் லோகேஷின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் வீட்டின் கதவை தட்டியதால் லோகேஷ் யார் என பார்ப்பதற்காக கதவை திறந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் லோகேஷை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதனால் […]
