குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஆஸ்பயர் என்ற கட்டிடத்தில் கட்டுமான பணி நடந்து வந்தது. இந்நிலையில், லிப்ட் பழுதாகி 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஆஸ்பியர்-2 என்ற பெயரில் கட்டிடம் கட்டும் போது ஏழாவது மாடியில் இருந்து லிஃப்ட் பழுதடைந்ததில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்பயர் 2 என்ற கட்டிடத்தில் […]
