சந்திராயன்-2 ஆராய்ச்சியால் இந்திய நாடே பெருமை கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படுவதை நாடே எதிர்பார்த்து காத்திருந்தது. அதன்படி போனமுறை தொழில்நுட்ப கோளாறுகளால் நிறுத்தி வைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் ஆனது, கோளாறு சரிசெய்யப்பட்ட பின் விண்ணில் ஏவுவதற்கும் தயாராகியது. இதையடுத்து இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து GSLV மார்க்-3 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்வதை காண பொதுமக்கள் ஆர்வமுடன் ஸ்ரீஹரிகோட்டா பகுதிகளுக்கு வருகை தந்தனர். இதனை […]
