‘எனது 50 வயதான அம்மாவுக்கு ஹேண்ட்சமான மாப்பிள்ளை வேணும்’ என பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்று பலர் சொல்வார்கள். பல இடங்களில் திருமணம் நடத்துவதில் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுவார்கள். பலர் முன்னிலையில், பெரியோர்களின் ஆசீர்வாதத்தோடு தான் நடைபெற வேண்டும் என்றும் கூறுவார்கள். இந்தத் திருமணங்களை பெரும்பாலும் பெற்றோர்களே நடத்திவைக்கின்றனர். ஆனால் இங்கு இளம்பெண் ஒருவர் தன்னைப் பெற்றெடுத்த தாய்க்கே மணமகன் வேண்டும் என ட்விட்டரில் தைரியமாக பதிவிட்டுள்ளார். […]
