மூதாட்டி ஒருவரை அவரது குடும்பத்தினரே சுடுகாட்டில் விட்டுச்சென்றதையடுத்து, அவர் அங்கு தவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுண்டக்காமுத்தூரில் இருக்கும் சுடுகாட்டில், வயதான மூதாட்டி ஒருவர் கடந்த 4 நாட்களாக கேட்க ஆளில்லாமல் தனிமையில் கிடந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இரக்கத்துடன் கொரோனா அச்சம் காரணமாக சற்று தூரம் தள்ளி நின்று தினமும் உணவு கொடுத்து வந்தனர். இந்நிலையில் மூதாட்டியின் நிலையை சிலர் மொபைல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக […]
