காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவிலிருந்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா விலகியுள்ளார். இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையாக திகழ்பவர் சானியா மிர்சா. கடந்த சில ஆண்டுகளாக இவர் மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் மட்டுமே பங்கேற்றுவருகிறார். குழந்தை பெற்றபின் இரண்டு ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடாமல் இருந்த இவர், சமீபத்தில் நடைபெற்ற ஹோபார்ட் இன்டர்நேஷனஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று கம்பேக் தந்தார். […]
