ஏலச்சீட்டு நடத்திவந்த மூதாட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாமியார் கிணறு தெருவைச் சேர்ந்தவர் குருவம்மாள் (வயது 70). அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்த இவரிடம் சீட்டுப்பணம் பெற்ற சிலர் பணத்தைத் திரும்பிக்கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் தன்னிடம் பணம் செலுத்தியவர்களுக்கும் பணம் கொடுக்க முடியாமல் குருவம்மாள் தவித்து வந்துள்ளார். தொடர்ந்து பணம் செலுத்தியவர்கள் குருவம்மாவின் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த […]
