கணவர் சேமித்து வைத்த பணத்தை வழங்க கோரி மூதாட்டி வங்கியின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தென்னம்புலத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காத்தாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 மகன்களும் 1 மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராமலிங்கம் இறந்துவிட்டார். இந்நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ராமலிங்கத்தின் சேமிப்பு கணக்கில் வைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக மூதாட்டி மேலாளரிடம் மனு […]
