சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,379 ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32ஆக உள்ளது. மேலும் கோயம்பேடு சந்தை கொரோனா பரவும் கூடாரமாக மாறி வருகிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு […]
