ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி நாட்டு மக்கள் முன் உரையாற்றினார். அதேபோல அந்தந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொருவரும் சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் […]
