கடந்த 14-ம் தேதி ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மத்திய அரசு கடந்த 13-ம் தேதி இந்தியா முழுவதும் இனி வரும் தபால் துறை தேர்வுகளுக்கான கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தான் இருக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இதனால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் 14-ஆம் தேதி நாடு முழுவதும் தபால் துறையில் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு நடைபெற்றது. […]
